top of page

சிவகங்கை மாவட்ட பொதுக்குழு கூட்டம்

Oct 1, 2021

தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட பொதுக்குழு கூட்டம் சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் 02.10.2021 இன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது

இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் திரு.க.ராஜராஜன், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் துணைத் தலைவரும் நமது சங்க மாநில பொருளாளருமாகிய மண்ணின் மைந்தர் திருஆ. துரைப்பாண்டி மாநில நிர்வாகிகள் திரு. சை. அ. ஜாகிர் உசேன், திரு ந.பாண்டி, மு. கலைமணி, மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மேனாள்பொதுச்செயலாளர் திரு.என்.பொன்னுப்பாண்டி அவர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்

இப்பொதுகுழுவில் மாவட்ட தலைவராக திரு சி.கருணாகரன் அவர்களும், மாவட்ட செயலாளராக திரு மு. கதிரேசன் அவர்களும், மாவட்ட பொருளாளராக அ. இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்

bottom of page