top of page

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்

தஞ்சை க. ராஜராஜன், மாநிலத் தலைவர்

Sep 18, 2021

18.09.2021 நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள், மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் மற்றும் பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களை சந்தித்து நமது சங்கத்தின் சார்பாக 21 கோரிக்கைகளை அளித்துள்ளோம்

இன்று 18.09.2021 நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள், மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் மற்றும் பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களை சந்தித்து நமது சங்கத்தின் சார்பாக 21 கோரிக்கைகளை அளித்துள்ளோம் எனவும் , நமது சங்கம் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் இணைப்பு சங்கம் என்பதால் இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர்,மாநில பொதுச் செயலாளர் ,மாநில பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டோம் எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

இக்கூட்டத்தில் நமது சங்கத்தின் மாநில பொருளாளர் அண்ணன் திரு ஆ .துரைப்பாண்டி அவர்கள் நமது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்

மேலும் மாண்புமிகு அமைச்சர் அவர்களும் மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களும் நமது கோரிக்கைகளை குறிப்பெடுத்துக் கொண்டனர் எனவும் இன்றைய கூட்டம் நமது கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான ஆயத்த கூட்டமாக அமைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

bottom of page